நாட்டுக்கு தேவையானது எது என்று? ஜனாதிபதி

மைத்திரிபால

நல்ல மனிதர்களினதும், தேசப்பற்றாளர்களினதும் நேர்மையான குரலுடனான சரியான பயணப்பாதையே தற்போது நாட்டுக்கு தேவை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் சிறந்த பயணப்பாதைக்கு தலைமைத்துவம் வழங்குவதற்கு நாட்டின் பிரதான மக்கள் சேவகர் என்ற வகையில் தாம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

ஒருமைப்பட்ட சுபீட்சமிக்க தேசமாக நாட்டை கட்டியெழுப்புவதற்கு பேதங்களின்றி இணைந்து கொள்ளமாறு அனைவருக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

நவீன தொழில்நுட்பத்துடன் பொருத்தமற்ற விடயங்கள் சமூகத்தை நோக்கி வருகின்றன.

எனவே, எமது வரலாறு மற்றும் பண்பாட்டை உறுதிப்படுத்துவதற்காக அனைவரும் தமது பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டிய காலம் மீண்டும் வந்துள்ளதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.