வவுனியாவில் பயங்கரமான வாகன விபத்து

ஈரப்பெரியகுளம் பகுதியில் பாரவூர்தியொன்று கெப்ரக வாகனம் ஒன்றுடன் மோதி இடம்பெற்ற விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில், 58, 53, 32 வயதுகளையுடைய ஒரு ஆணும், இரு பெண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

30 வயதினையுடைய முகமத் சுது என்பவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தில் கெப்ரக வாகனத்தில் பயணித்தவர்களே பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இறந்தவர்களின் சடலங்கள் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள போதும் அவர்களது பெயர் விபரங்களை உடனடியாக பெற முடியவில்லை.

இதேவேளை, இறந்தவர்கள் பயணித்த வாகனத்தில் வைத்தியசாலைக் குறியீடு பொறிக்கப்பட்ட ஸ்டிக்கர் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈரம்பெரியகுளம் பொலிசார் மேற்கொண்டு வருகிறார்கள்.

வவுனியா விபத்தில் பலியாகிய வைத்தியர் உள்ளிட்ட மூவரும் அடையாளம் காணப்பட்டனர்!

வவுனியா, ஈரப்பெரியகுளத்திற்கு அண்மித்த நாவற்குளம் பகுதியில் இன்று அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் வைத்தியர் உட்பட அவரது உறவினர்கள் மூவர் பலியாகியுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

புத்தளத்தில் வைத்தியராக பணியாற்றும் பெண் வைத்தியரான ரி.எம்.ஏ. சுதேசிகா என்பரும் அவரது கணவரான முகமது சபுர் மற்றும் மாமாவான வவுனியாவில் பிரபல வர்த்தகரான சப்ரின் மற்றும் அவர் மனைவி மலீனா ஆகியோர் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருக்கையிலேயே அதிகாலை 5 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது வைத்தியர் மற்றும் அவரது 58 வயதுடடைய கணவரின் தந்தையான சப்ரின் 53 வயதுடைய கணவரின் தாயார் மலீனா சம்பவ இடத்தில் பலியாகியுள்ளனர்.

வைத்தியரின் கணவர் முகமது சபுர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ் விபத்து தொடர்பான விசாரணைகளை மதவாச்சி பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.