கஞ்சாவுடன் ஆசிரியர் ஒருவர் கைது

நான்கு கிலோ கிராம் கஞ்சாவுடன் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.பண்டாரவளை – கொஸ்லந்த – தியலும பிரதேசத்தில் வைத்து காவற்துறையால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர் 51 வயதான வெல்லவாய கல்வி வலயத்தை சேர்ந்த பாடசாலையொன்றின் ஆசிரியர் என காவற்துறை குறிப்பிட்டுள்ளது.

குறித்த கஞ்சா தொகையை விற்பனை செய்வதற்காக உந்துளியில் பயணித்து கொண்டிருந்த போதே காவற்துறை அவரை கைது செய்துள்ளது.

சந்தேக நபரை இன்று பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளதாக கொஸ்லந்த காவற்துறை தெரிவித்துள்ளது