துப்பாக்கிச் சூட்டில் இருந்து மயிரிழையில் தப்பிய கிரிக்கெட் வீரர்

துப்பாக்கிச் சூட்டில் இருந்து மயிரிழையில் தப்பிய கிரிக்கெட் வீரர்

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரரான ஷபுர் ஷத்ரான் சென்ற வாகனம் மீது மர்ம நபர்கள் தூப்பாக்கிச் சூடு நடத்தியதில் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.

ஆப்கானிஸ்தான் வேகப்பந்து வீச்சாளரான ஷபுர் ஷத்ரான்(29). கடைசியாக அயர்லாந்து அணிக்கெதிராக கடந்த ஆண்டு ஜூலை 12-ந்தேதி சர்வதேச போட்டியில் விளையாடிய நிலையில் தற்போதும் அந்த அணிக்காக விளையாடி வருகிறார்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு தனது சகோதரரை அழைத்துக் கொண்டு காபூலில் உள்ள பக்ராமி பகுதி அருகே காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரது காரை வழிமறித்த சில மர்ம நபர்கள் காரின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலில், பல குண்டுகள் காரை தாக்கிய போதும், மயிரிழையில் அதிர்ஷ்டவசமாக இருவரும் உயிர் தப்பியுள்ளனர்.

இதுவரை, ஷபூர் மீது தாக்குதல் நடத்தியதற்கு எந்த குழுவோ அல்லது தனி நபரோ பொறுபேற்கவில்லை என்ற போதும், ஷபூர் ஷத்ரான் மீது ஏற்கனவே இதுபோன்ற தாக்குதல்கள் நடந்துள்ளன என்று கூறப்படுகிறது