போலி நாணயத்தாள் வைத்திருந்த இருவர் கைது

Principal arrested

வெலிகம – கனன்கே பிரதேசத்தில் நடாத்திச்செல்லப்பட்ட போலி நாணயத்தாள் அச்சகமொன்று வந்துரம்ப காவற்துறையினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

இதன் போது , இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரும் ஐந்தாயிரம் போலி நாணயத்தாள் ஒன்றை செலுத்தி விற்பனை நிலையமொன்றில் பொருட்களை கொள்வனவு செய்ய வந்துள்ளனர்.

இதன் போது , குறித்த நாணயத்தாள் போலியானது என அடையாளங் கண்டுக்கொண்ட விற்பனை நிலையத்தின் உரிமையாளர் இது தொடர்பில் காவற்துறைக்கு அறிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்தே குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பின்னர் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய குறித்த அச்சகம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.