நாளை முதல் மண்ணெண்ணெய் விலை குறைப்பு

நாளை முதல் மண்ணெண்ணெய் விலை குறைப்பு

பாதீட்டில் முன்வைக்கப்பட்ட யோசனையின்படி மண்ணெண்ணெய் ஒரு லீட்டரின் விலை இன்று நள்ளிரவு முதல் 5 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த பாதீட்டு யோசனையை இதுவரை அமுல்படுத்தாப்படாமை தொடர்பில் எமது ஹிரு செய்தி ஊடாக அண்மையில் வெளிகொண்டுவரப்பட்டது.

இது குறித்து கருத்து தெரிவித்த பெற்றோலிய வளங்கள் மற்றும் பெற்றோலிய வாயு அமைச்சர் சந்திம வீரக்கொடி, இது குறித்த பரிந்துரை நிதியமைச்சில் இருந்து கிடைக்கப்பெறவில்லை என தெரிவித்திருந்தார்.

இதன்படி தற்போது 49 ரூபாயாகவுள்ள மண்ணெண்ணெய் ஒரு லீட்டரின் விலையை 5 ரூபாவால் குறைக்குமாறு நிதியமமைச்சு இன்று பெற்றோலிய வள அமைச்சிற்கு அறிவித்துள்ளது.

எனவே இன்று நள்ளிரவு முதல் மண்ணெண்ணெய் ஒரு லீட்டரின் புதிய விலை 44 ரூபாய் ஆகும்.