சர்வதேச வர்த்தக சந்தை யாழ்ப்பாணத்தில் 27ல் ஆரம்பம்

யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக சந்தை இந்த மாதம் 27ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

27ம் திகதி முதல் 29ம் திகதி வரையில் யாழ்ப்பாண மாநகர மைதானத்தில் இந்த சந்தை நடைபெறவுள்ளது.

‘வடக்கிற்கான வாயில்’ என்ற தொனிப்பொருளில் இடம்பெறும் இந்த நிகழ்வு, உள்ளுர் மற்றும் சர்வதேச உற்பத்திகளுக்கு வாய்ப்பளிக்கவுள்ளது.

சுமார் 300க்கும் அதிகமான நிறுவனங்களின் 1000க்கும் அதிகமான பொருட்கள் அங்கு காட்சிப் படுத்தவுள்ளன.

இதில் 60 ஆயிரம் பேர் வரையில் கலந்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.