இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைவர் தெரிவு

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைவர் தெரிவு

இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 ஓவர்கள் கிரிக்கெட் போட்டிகளின் தலைமை பொறுப்பில் இருந்து மகேந்திர சிங் டோனி விலகியுள்ள நிலையில் அணியின் தலைவராக விராட் கோஹ்லி தெரிவிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை இதனை அறிவித்துள்ளது.

இருப்பினும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் 20க்கு20 கிரிக்கெட் போட்டித் தொடருக்கான தேர்வில் தோனி இடம்பெறுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டோனியின் இந்த விலகலை தொடர்ந்து விராட் கோஹ்லி இந்திய கிரிக்கெட் அணியின் அனைத்து விதமான போட்டிகளுக்கும் தலைவராக நியமிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக, கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் டெஸ்ட் போட்டிக்கான தலைமை பொறுப்பில் இருந்து டோனி விலகியதை அடுத்துஇ விராட் கோஹ்லி தலைவராக பொறுப்பேற்றமை குறிப்பிடத்தக்கது.