காதலியை கற்பழித்து வீடியோ எடுத்த காதலனுக்கு கிடைத்த நீதிமன்ற தண்டனை

Halil-Cetinkayali

அமெரிக்காவில் காதலியை கற்பழித்து அதனை வீடியோ எடுத்து மிரட்டிய காதலனுக்கு அந்நாட்டு நீதிமன்றம் கடுமையான தண்டனை வழங்கியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள எஸ்சக்ஸ் நகரில் Atlanta Hammond(21) என்ற இளம்பெண் வசித்து வருகிறார்.

தன்னுடைய வாழ்க்கையில் நிகழ்ந்த மிக மோசமான சம்பவங்களை தற்போது ஆதாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.

இதே நகரை சேர்ந்த இஸ்லாமியரான Halil Cetinkayali(30) என்பவரை கடந்த 2013-ம் ஆண்டு சந்தித்து காதல் வயப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து இருவரும் திருமணம் செய்யாமல் ஒரே வீட்டில் வசிக்க தொடங்கியுள்ளனர். இவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

பின்னர், நாட்கள் செல்ல தன்னுடைய காதலியை அவர் தொடர்ச்சியாக சித்ரவதை செய்து வந்துள்ளார். காதலியை அடிக்கும்போது ஏற்படும் காயங்களை புகைப்படம் எடுத்து பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.

இதுமட்டுமில்லாமல், காதலியை மிரட்டி அவரை கற்பழித்து அதனை வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் ஒரு நாள் காதலி இணையத்தளத்தில் ஒரு தகவலை தேடியபோது அவருடைய காதலன் பொலிசாரால் தேடப்பட்டு வரும் ஒரு குற்றவாளி என தெரியவந்துள்ளது.