பறக்கும் தட்டு பற்றிய உண்மையை போட்டுடைத்தவர் சுட்டுக் கொலை

பிரித்தானியாவில் பிறந்து இசையுலகில் பல சாதனை படைத்த John Lennon துப்பாக்கியால் கொல்லப்பட்டு 36 ஆண்டுகள் ஆகிவிட்டது.

பிரித்தானியா நாட்டில் கடந்த 1940ல் பிறந்தவர் தான் இந்த John Lennon. சிறுவயதிலிருந்தே இசை மீது ஆர்வம் கொண்ட இவர் இளைஞனாக ஆன பின்னர் பிரபல இசையமைப்பாளராகவும், பாடலாசிரியராகவும் வலம் வந்தார்.

தான் எழுதி இசையமைக்கும் பாடல்கள் மூலம் பல பரபரப்பான மற்றும் அரசுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு வந்ததால் John அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வந்தார்.

இந்நிலையில் 1974ம் ஆண்டு ஆகஸ்ட் 23ம் திகதி அமெரிக்காவில் தன் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த போது இந்த பறக்கும் தட்டுகள் தன் வீட்டின் மேலே பறப்பதை பார்த்துள்ளார்.

குறித்த UFO எவ்வாறு இருந்தது என்று மக்களுக்கு விளக்கி கூறினார், ஹெலிகொப்டர், பலூன் போன்றோ இல்லை என்றும், கருப்பாக இருந்த அந்த உருவத்தில் இருந்து வெளிச்சம் வந்தது எனவும் தெரிவித்தார். பெரிய, வட்ட வடிவிலான உருவம் தங்களை நோக்கி வந்ததாகவும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து இசையில் தன்னை இணைத்துக் கொண்ட John Lennon, முன்னாள் காதலியுடன் சந்தோஷசமாக பொழுதை கழித்தார்.

இதனிடையில் Mark David Chapman என்பவர், John-யை சுட்டுக் கொன்றார், இதில் சம்பவ இடத்திலேயே John மரணமடைந்தார். மனதில் பட்டதை தைரியமாக சமூகத்துக்கு சொன்ன John க்கு அதுவே எமனாக வந்து விட்டது.