105 வயதுடைய முதியவரின் சாதனை வீடியோ

பிரான்ஸ் நாட்டில் 105 வயது முதியவர் சைக்கிள் ஓட்டபந்தையத்தில் சாதனை படைந்துள்ளார். சாதனைக்கு வயது தடையில்லை என்பதற்கு அவர் ஒரு மிக சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.

105 வயதுடைய அவர் 22 கிலோ மீட்டர் தொலைவை 1 மணி நேரத்தில் கடந்து சாதனை படைத்துள்ளார். இந்த சாதனை மூலம் அனைத்து மக்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

பிரான்ஸைச் சேர்ந்த ராபர்ட் மார்சண்ட் என்பவர், சைக்‍கிள் ஓட்டுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.

105 வயது ஆகும் நிலையிலும் சாதனை படைக்‍க ஆர்வம் கொண்டிருந்தார். சைக்‍கிள் மூலம் நீண்ட தூரத்தை கடக்‍க விரும்பியவர், அதற்கான முயற்சியிலும் ஈடுபட்டார்.

மேலும் 1 மணி நேரத்தில் அவர் 22.5 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து பலரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

அப்போது அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கானோர் கைதட்டி ஆரவாரம் செய்து அவருக்‍கு பாராட்டு தெரிவித்தனர்.

1911-ம் ஆண்டில் பிறந்த இவர், தனது 14 வயதில் மோட்டார் சைக்கிள் ஓட்ட பழகினார். பின்னர் தனது 67-வது வயதில் சைக்கிள் ஓட்டுவதில் ஆர்வம் காட்டினார்.

2012-ம் ஆண்டில் அதாவது தனது 100-வது வயதில் 4 மணி 17 நிமிடம் 27 வினாடிகளில் 100 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் ஓட்டி ஏற்கெனவே சாதனை படைத்திருப்பது குறிப்பிடத்தக்‍கது.